states

img

இமாச்சலில் 8 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம் 

இமாச்சல் பிரதேசத்தில் 8 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில், உள்ள கச்சிகாட்டி பகுதியில் 7 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று திடீர் என்று இடிந்து விழுந்தது. கட்டிடம் பலவீனமாக இருந்ததால், அதில் இருந்த நபர்கள் அனைவரும் ஏற்கனவே  வெளியேற்றப்பட்டு விட்டனர். இந்நிலையில், 8 மாடி கட்டிடம் திடீர் என இடிந்து விழுந்தது.  இதில் அருகில் இருந்த மேலும் இரண்டு கட்டிடங்களுக்கு, சேதம் ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

;